ரஜினியின் அடுத்த படம்?
தன்னுடைய அடுத்த படத்தின் பெயரை வெளியிடாமல் வழக்கம் போல் ரஜினி தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார்.

பிறந்தநாளின் போது ரசிகர்களைச் சென்னையில் தன் வீட்டின் முன்பு சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டிருந்த ரஜினி, தொடந்து சில ஆண்டுகளாய் பிறந்தநாளுக்குச் சென்னையில் இருப்பதில்லை. தன்னுடைய ரசிகர்களைச் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.

ரஜினி மன்றத்தினர் பிறந்தநாள் அன்று கோயிலில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் எனத் தமிழகமெங்கும் ஒரே அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பல இடங்களில் ஏழைகளுக்கு அன்னதானம், இனிப்பு மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினர்.

ரஜினியின் புதிய படத்தை இயக்க கே.எஸ். ரவிக்குமார் அல்லது ஹரி இயக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. என்றாலும், அடுத்த பட அறிவிப்பு இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com