'சுவாசம்' இசைக் குறுந்தகடு
கபிலேஷ்வர் என்ற இளம் இசை இயக்குநர் அண்மையில் வெளியிட்ட இசைக் குறுந்தகடுதான் 'சுவாசம்'. இலங்கையில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இளம்பிராயத்தில் சென்னையில் இசை பயின்று தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இதற்கு முன்னரும் பல இசைப்பேழைகளைத் தயாரித்து இருப்பினும், 'சுவாசம்' தரத்தில் முதலிடம் வகிக்கிறது. மதிவேந்தனின் பாடல்களுக்கு கபிலேஷ்வர் இசை அமைத்ததுடன் பாடல்களைப் பாடியும் உள்ளார். இவருடன் தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், பவதாரணி, சுஜாதா, சொர்ணலதா, ஹரிணி போன்ற பலர் இணைந்து பாடியுள்ளனர். புதுமுகமான தென்கலி·போர்னியா வாழ் ஜெயம் குமாரநாயகம் முதன்முறையாக சொர்ணலதாவுடன் இணைந்து இதில் பாடியிருக்கிறார். உள்ளூர்க் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், தென் கலி·போர்னியாவை மையமாகக் கொண்ட US Raj Pictures பொருளுதவி வழங்கி ஜெயத்தின் கனவை நனவாக்கி இருக்கின்றனர்.

இக்குறுந்தகட்டை வாங்குவதால் நல்ல இசை கேட்கலாம் என்பதோடு வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்போம் என்பதில் ஐயமில்லை.

தொடர்புகொள்ள:
www.kapileshwaronline.com
kapileswar24@yahoo.com
usrajpictures@hotmail.com
raj 323-385-8961
jeyam 231-747-7073 and 231-300-0923

தகவல்: பிரகாசம்

© TamilOnline.com