புளிப்பொங்கல்
இதை ரவையிலும், அரிசி நொய்யிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

ரவை - 2 கிண்ணம்
புளி - 1 எலுமிச்சை அளவு
முந்திரி - 6
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கரண்டி
பெருங்காயம், கருவேப்பிலை

செய்முறை
ரவையைக் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றைத் தாளித்து மஞ்சள் பொடி போட்டு புளியைக் கரைத்து விடவும். ரவை வேகும் அளவு புளித்தண்ணீர்விட வேண்டும். உப்பு, கருவேப்பிலை போட்டு ரவையைக் கொட்டி வேகவிடவும்.

நன்றாக வெந்ததும் முந்திரிப்பருப்பு நெய் அல்லது எண்ணெயில் வறுத்துப் போடவும்.

மேலும் சிறிது எண்ணெய் விட்டு ஒட்டாமல் வரும் போது இறக்கிவிடவும்.

இதனைப் புளித்த மோர் விட்டும் செய்யலாம். அரிசி நொய்யில் செய்தாலும் மிகமிக நன்றாக இருக்கும்.

தங்கம் ராமசுவாமி

© TamilOnline.com