ரஜினி மகளின் கைவண்ணத்தில் 'நஞ்சுபுரம்'
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுக நாயகன் ராகவ் தற்போது 'நஞ்சுபுரம்' என்ற படத்தில் நாயகனான நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு இசையமைப்பாளரும்கூட.

ஆம் வஸந்த் இயக்கத்தில் வெளிவந்த 'ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில் இசையமைத்த அனுபவம் இவருக்கு உண்டு. 'நஞ்சுபுரம்' படத்தை இல்லுசன்ஸ் இன்பைனைட் என்னும் படநிறுவனம்

தயாரித்து வழங்குகிறது. கதாநாயகியாக மோனிகா நடித்துக் கொண்டிருக்கிறார். படத்திற்கான இசையை நாயகன் ராகவ் கவனித்துக் கொள்கிறார். சென்னை திரைப்பட கல்லூரி மாணவரான சார்லஸ்

இப்படத்தின் திரைக்கதை, இயக்கத்தை கவனித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தரியா இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்திருப்பது முக்கிய செய்தியாகும்.

தஞ்சாவூர் அருகில் நடந்த ஓர் உண்மை சம்பவே 'நஞ்சுபுரம்' படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

வருகிற ஜனவரி மாதம் திரைக்குவரவிருக்கும் 'நஞ்சுபுரத்தின்' இறுதிக்காட்சிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com