தனுஷ் நடிக்கத் தடை!
'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி' என்று வெற்றிப்படங்களின் நாயகன் தனுஷ¤க்கு யார் கண்பட்டதோ தெரியவில்லை; இவர் மீது ரூபஸ் பாஸ்கர் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

'ராகவா' என்கிற படத்துக்காக நடிகர் தனுஷைக் கதாநாயகனாக நடிக்க அணுகி, அவருக்கு முன்பணமாக ரூபாய் 10 லட்சத்தை அளித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட தேதிகளில் நடிப்பதற்குத் திடீரென்று தனுஷ் மறுத்து விட்டதைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தார் முறையிட்டனர். அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து பேசினர். தனுஷ் இவர்கள் கேட்ட நஷ்டஈட்டுத் தொகையை தர இயலாது என்று கூறியதால் இன்று பிரச்சனைக்குள்ளாகியுள்ளார்.

வேறு படங்களுக்குத் தேதி கொடுக்கவோ, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவோ தனுஷ¤க்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அது பிறர் கண்ணில் விழுந்து துன்புறுத்தக் கூடாது என்பதிலும் முன்னுக்கு வரும் நட்சத்திரங்கள் கவனமாக இருக்கவேண்டும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com