பந்தயக் காளைகள்
இந்த வருடம் பொங்கலுக்குத் மொத்தம் 5 தமிழ்த் திரைப்படங்களே வெளிவந்துள்ளன. தீபாவளி, பொங்கல் என்றால் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களாவது ரிலீஸ் செய்யப்படும் காலம் போய், வெறும் 4 படங்கள் வெளிவருவதற்கே பெரும் பாடாகி விட்டது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில். கமலின் 'விருமாண்டி', விஜயகாந்தின் 'எங்கள் அண்ணா', இளம் கதாநாயகர்கள் சிம்புவின் 'கோவில்' மற்றும் தனுஷின் 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' ஆகிய படங்களே திரைக்கு வந்திருக்கின்றன. இந்த இரண்டிலும் சேராத பிரஷாந்தின் 'ஜெய்'யும் வெளிவந்திருக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டில் முந்தப் போவது இளம் காளைகளா, முரட்டுக் காளைகளா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com