தமிழன் வழிகாட்டி 2004 வெளியீடு
கனடாவில் டொரான்டோ நகரில் தமிழ் வர்த்தகக் கைநூலான தமிழன் வழிகாட்டியினை வெளியிட்டு வரும் செந்தியின் ஆதவன் பதிப்பக நிறுனத்தின் 2004 கைநூல் மாநகர மேயர் டேவிட் மில்லர் அவர்களால் வெளியிடப்பட்டது. மேலே உள்ள படத்தில் செந்தி செல்லையா தம்பதியினர் அவர்களுக்கு முதல் பிரதியை வழங்குவதையும் அருகே நண்பர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம். இந்தக் கைநூல் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் டொரான்டோவில் தமிழர்களுடைய வணிக ஸ்தாபனங்களின் விளம்பரங்கள், புதிய குடிவரவாளர்களிற்குரிய தகவல்கள் எனப் பயனுள்ள பல விடயங்களைத் தாங்கியுள்ளது.

-

© TamilOnline.com