வாழைத்தண்டு கறி
தேவையான பொருட்கள்:

நார் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிய தண்டு - 2 கிண்ணம்
பயத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/8 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப

தாளித்துக் கொட்ட:

சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2

செய்முறை:

நறுக்கிய வாழைத்தண்டைச் சிறிது மோர் கலந்த நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்துப் பின்னர் பிழிந்து எடுக்கவும். அடி கனமான வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு, பெருங்காயம் போட்டு வறுக்கவும். பின்னர் பிழிந்து வைத்துள்ள வாழைத்தண்டையும் பயத்தம் பருப்பையும் உப்புப் போட்டு நன்றாக வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளலாம்.

தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல் போட்டு நன்றாக ஒன்று சேரக் கிளறி இறக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com