வாழைத்தண்டு கோசுமல்லி
இதில் நார்ப்பொருள் நிறைய இருப்பதால் மலச்சிக்கலை நீக்கும். தவிர மேலே கூறிய எல்லா மருத்துவக்குணங்களும் இதற்கும் உண்டு.

தேவையான பொருட்கள்:

வாழைத் தண்டு இளசாக இருந்தால் சுவையாக இருக்கும்.

நார் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிய தண்டு - 1 கிண்ணம்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
பச்சைக் கொத்துமல்லி - சிறிதளவு
தாளித்துக் கொட்ட சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (சிறியது) - 2
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வாழைத் தண்டை மஞ்சள் பொடி, உப்புடன் விரவிச் சிறிது நேரம் வைக்கவும். அடி கனமான வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்துக்கொண்டு, துருவிய தேங்காய் போட்டுச் சற்று கிளறிய பின்பு பிசிறி வைத்துள்ள வாழைத்தண்டையும் கொட்டிக் கலக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழச் சாற்றில் சர்க்கரை கலந்து விடவும். நறுக்கிய பச்சைக் கொத்துமல்லியை மேலாகத் தூவிப் பரிமாறவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com