கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
வட அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய கர்நாடக இசைவிழாவான கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் 18வரை கொண்டாடப்படும். இசைப் போட்டிகள், பயிலரங்கம், கச்சேரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பேரா. டி.என். கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், முனைவர் என். ரமணி, ரவிகிரண், சஞ்சய் சுப்பிரமணியம், எஸ். சௌம்யா, பாம்பே ஜயஸ்ரீ ராம்நாத், டி.எம். கிருஷ்ணா, அருணா சாய்ராம் ஆகிய பிரபல கலைஞர்கள் பங்கேற்பர். அமெரிக்காவின் ராகவன் மணியன் மற்றும் சங்கீதா சுவாமிநாதன் ஆகியோரின் கச்சேரிகளும் உண்டு.

1978ஆம் ஆண்டு எளிய நிகழ்ச்சியாக ஒரு சர்ச்சின் நிலவறையில் வி.வி. சுந்தரம் மற்றும் ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் தம் குடும்பத்தினருடன் கொண்டாடத் தொடங்கியது இந்நிகழ்ச்சி. இன்று சுமார் இரண்டாயிரம் சுவைஞர்களும் பிரபல வித்வான்களும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட வைபவமாக உருமாறியுள்ளது.

நிகழ்ச்சி இலவசம். முழுதும் தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் நடத்தப்படும் இவ்விழாவில் இலவசச் சிற்றுண்டியும், உணவும் வழங்கப்படுகின்றன. இவற்றைத் தயாரித்து வழங்குவோரும் தொண்டர்களே.

முழு விவரங்களுக்கு: http://www.aradhana.org

விழா மலரில் விளம்பரம் செய்ய: clevelandbalu@hotmail.com

தொண்டர் பணிபுரிய: அர்விந்த் பாலகிருஷ்ணன் - arvind_bala@yahoo.com

உணவுத் தயாரிப்புப் பகுதியில் பணியாற்ற: கோமதி பாலு - 216 476 1604

© TamilOnline.com