உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி'
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தது 'விருமாண்டி'. இது கமல்ஹாசனுக்குப் பெரிய திருப்புமுனை என்றே சொல்லலாம். வியாபார ரீதியாகவும் தான்.

'விருமாண்டி' திரைப்படத்தை சான் ·பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற இடங்களில் திரையிடக் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதற்காக 25 நாட்களுக்கு அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருக்கும் அவர், அங்கு இத்திரைப்படத்தை ஹாலிவுட்டில் புகழ் பெற்று விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உலகத்தினருக்குத் திரையிட்டுக் காட்டவுள்ளார்.

இதன்பிறகு ஹாலந்து சென்று, உலகத் திரைப்பட விழாவில் திரையிடுவார். விருமாண்டி சண்டியர்தான்!

கேடிஸ்ரீ

© TamilOnline.com