NumTV: கேட்டது கிடைக்கும்
பெண்டா மீடியா கிராஃபிக்ஸின் பிரதான பொழுதுபோக்கு வலைத்தளம் www.numtv.com. இது இணையத்தள ஒளிபரப்பின் மூலம் இந்தியச் செயற்கைக்கோள் நிகழ்ச்சிகளையும், நேரடி ஒளிப்பரப்புகளையும் உலகமெங்கும் வாழும் இந்தியர்களுக்கு வழங்குகிறது. தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமின்றித் திரைப்படங்கள், வானொலி, மேடை நிகழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களைச் சந்தாதாரர்களுக்கு 1999ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

நம் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்புகளை இரண்டு வகைப்படுத்தலாம்: ஒன்று பதிவுசெய்த வாடிக்கையாளருக்கான இலவச நிகழ்ச்சித் தொகுப்பு, மற்றொன்று சந்தாதாரர்களுக்கான நிகழ்ச்சித் தொகுப்பு. நம் டிவியில், ஜெயா டிவி, ராஜ் டிவி, ராஜ் டிஜிடல், ராஜ் மியூசிக், ராஜ் விசா, CMM, SPLASH TV, SSMUSIC, நம் தமிழ், நம் தெலுங்கு ஆகிய இந்திய அலைவரிசைகள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகளிலும் நிகழ்ச்சிகளை விரைவில் வழங்க உள்ளது.

தற்போது குறைந்தபட்சச் சந்தா ஒரு டாலர் முதல் ஆரம்பமாகிறது. 10 தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் 10 நம் சேவைப் பிரிவுகள், 24 மணிநேர தமிழ் இண்டர்நெட் ரேடியோ என ஏற்கனவே பல தொகுப்புகளை வழங்கிவரும் நம் டிவியின் தற்போதைய பதிந்துகொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை 4,50,000.

தன்னுடைய வலிமையான தொழில்நுட்பத் திறத்தினால் பயனாளிகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தரும் சேவையை நம் டிவியால் ஆற்றமுடிகிறது. வாடிக்கையாளர் தமது ஓய்வு நேரத்தில் 24 மணிநேரமும் கண்டுகளிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்புகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளில் 15 நாள் நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பும் வைக்கப்பட்டுள்ளன. வலைத்தளத்தின் மூலமோ, நடமாடும் தொலைபேசி வழியாகவோ, கியோஸ்க் மற்றும் தொலைக்காட்சி வழியாகவோ நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆசியத் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெருக்குதல், சீனா, டாய்வான், கொரியா நாடுகளின் நிகழ்ச்சித் தொகுப்புகளை வழங்குதல் ஆகியவை நம் டிவியின் எதிர்காலத் திட்டங்களில் அடங்கும்.

அதிகச்செலவு, குறைந்த எட்டுதல் போன்ற சவால்களை வெல்லக்கூடிய அதிசக்தி வாய்ந்த தொழில்நுட்பத் தகவலமைப்பை உருவாக்கும் ஆராய்ச்சியில் தற்போது நம்டிவி ஆராய்ச்சி ஈடுபட்டுள்ளது. அதே சமயத்தில் நுகர்வோருக்கு மனத்திருப்தி தரும் உலகத்தரம் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தொலைநோக்கு லட்சியத்தோடு உலகளாவிய ஆசியர்களின் நாடு கடந்த நண்பனாக நம் டிவி குடியிருக்கும் என்று அதன் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.

தகவல்: NumTV.

© TamilOnline.com