வாழைக்காய் எரிசேரி
தேவையான பொருட்கள்

வாழைக்காய் தோல் சீவி துண்டங்களாக - 2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் (புதியது) - 1/8 கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி (இன்ஸ்டண்ட்) - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சமையல்எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிப்பதற்கு கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், துருவிய தேங்காய் சேர்த்துத் தண்ணீர் விட்டு நன்றாகச் சற்று நீர்க்க அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, அதில் மஞ்சள் பொடி, புளி (இன்ஸ்டண்ட்), உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். கொதித்ததும் வாழைக்காய்த் துண்டங்களைப் போட்டு வேகவிடவும். காய் குழைந்து விடக்கூடாது.

வெந்த வாழைக்காயில் அரைத்த தேங் காய்க் கலவையைப் போட்டு கலந்து நன்றா கக் கொதிக்க விடவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப் பிலை தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com