சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில்
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான 'சாயாவனம்' சா. கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதை தொலைக்காட்சித் தொடராக வஸந்த் இயக்கத்தில் வந்துள்ளது.

வயதான தாத்தா பாட்டியுடன் பேரன் வசித்து வருகிறான். தாத்தாவிற்கு குளத்தில் மீன் பிடிப்பது தான் வேலை. ஒரு பெரிய மீன் பல நாட்கள் தூண்டில் போட்டும் தாத்தாவின் தூண்டிலில் சிக்காமல் தாத்தாவிற்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. அந்த நேரத்தில் தாத்தாவுடன் போட்டியில் இறங்கும் பேரன் தாத்தாவை ஜெயித்து விடுகிறான். இதுதான் இப்படத்தின் மூலக்கதை.

இந்த கதையை எழுதிய ஆண்டுகளில் சா. கந்தசாமியே பெருமளவில் பேசப்பட்டவராக விளங்கினார். அத்தனை கம்பீரமாகவும், ஆழமாகவும் எழுத்தைக் கையாண்டிருந்தார். பார்த்ததும் நம்மையுமறியாமல் படத்தில் கரைந்து விடுகிறோம். மூலக்கதைக்கு விசுவாசமாகவே வஸந்தின் இயக்கம் இருக்கிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com