மீண்டும் நதியா...
12 வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட உலகில் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் நுழைந்து கொடிகட்டிப் பறந்தார் நதியா. தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தார். நதியா வளையல், நதியா தோடு என்று விற்ற காலம் உண்டு.

சின்ன மேடம் படத்திற்குப் பின் நதியா சிரிஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் நதியா அங்கு தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருந்து, தற்போது பிபிசி வானொலியில் பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல். இரண்டு அழகான குழந்தைகளுக்கு தாயான பின், இப்போது விடுமுறையில் சென்னை வந்துள்ளார்.

ஜெயம் படநிறுவனத்தினர் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்திற்காக நதியாவை மறுபடியும் அரிதாரம் பூச வைத்திருக்கின்றனர். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடிக்கிறார் நதியா. இப்படத்தில் நதியாவின் கதாபாத்திரம் பேசப்படும் என்கிறார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com