பானகம், நீர்மோர் மற்றும் வடைபருப்பு
பானகம்

இரண்டரை கிண்ணம் தண்ணீரில் அரைக் கிண்ணம் வெல்லப் பொடி போட்டு ஒரு தேக்கரண்டி ஏலப்பொடியை போட்டு கலக்கினால் பானகம் தயார். இத்துடன் அரை தேக்கரண்டி சுக்குப் பொடி, ஒருமூடி எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துச் செய்பவர்களும் உண்டு.

நீர்மோர்

இதுவும் பானகத்தைப் போலவே தாகத்தை தனித்து உஷ்ணத்தையும் குறைக்கக்கூடியது.

அரைக் கிண்ணம் மோரை நன்றாகக் கடைந்து அதில் ஒன்றரைக் கிண்ணம் தண்ணீர்விடவும். கறிவேப்பிலையுடன் தேவையான கல் உப்பை சேர்த்துச் நன்றாகக் கசக்கி மோரில் கலக்கவும்.

பெருங்காயம் கரைத்துவிடவும். கடுகு தாளிக்கவும். 1 மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.

வடைபருப்பு

அரைக் கரண்டி பயத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்புடன் மாங்காயைப் பொடியாகச் நறுக்கிச் சேர்க்கவும்.

உப்புப் போட்டு, சிறிது கடுகு தாளித்து, பெருங்காயத் தண்ணீர் சேர்க்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com