அம்மாவே இனிஷியலாக...
'ஜெயம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு எடிட்டர் மோகனின் அடுத்த படம் 'எம். குமரன் சன் ஆ·ப் மகாலட்சுமி'. இந்தப் படத்திலும் அவரது மூத்த மகன் ராஜாதான் இயக்குநர். இளைய மகன் ரவி கதாநாயகனாக நடிக்க, அஸின் கதாநாயகி. ஜெயத்தில் மென்மையான கதாநாயகனாக வந்த ரவி, இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீரர். இதற்காகவே தன் உடம்பைக் கும்மென வைத்திருக்கிறார்.

அண்ணன்-தங்கை, அப்பா-மகள், அண்ணன்-தம்பி இவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பைத் தமிழ் சினிமா பல கோணங்களில் சொல்லியிருந்தாலும் இந்தப் படத்தில் அம்மா, மகன் உறவைப் பரிசீலிக்கிறது கதை.

தன் மகனுக்கு தேவையான எல்லா வற்றையும் செய்து கொடுத்துவிட்டுத் தாய் இறந்துவிடுகிறாள். தாயின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக வைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதும் கதாநாயகனைப் பற்றியது கதை.

பிள்ளைகள் தன் தாயின் பேரை இனிஷியலாக வைத்துக் கொள்ளலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை நினைவுப் படுத்துகிறது 'எம். குமரன் சன் ஆ·ப் மகாலட்சுமி'. நல்ல சிந்தனை.

கேடிஸ்ரீ

© TamilOnline.com