மோகன் லாடு
தேவையான பொருட்கள்

ரவை - 1 கிண்ணம்
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
சர்க்கரை பொடித்தது - 1கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வறுத்த திராட்சைப் பழம் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு

செய்முறை

ரவையைத் அரைக் கிண்ணம் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும். இது கால் மணி நேரம் ஊறிய பின்னர் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் மைதாமாவில் தோய்த்து மெல்லியதான அப்பளங்களாக இட்டு எண்ணெயில் போட்டு அதிகம் சிவக்க விடாமல் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும்.

பின்னர் இந்த அப்பளங்களை ஒன்றிரண் டாக உடைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும். பொடித்த சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலப்பொடியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். நெய்யை நன்றாகச் சூடுசெய்து இதில் விட்டு, சூட்டுடன் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com