இஞ்சி சாதம்
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1 1/2 கிண்ணம்
இஞ்சி - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
நெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

ஓவனை 400 டிகிரி ·பாரன்ஹீட்டுக்குச் சூடு படுத்தவும். 3 கிண்ணம் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், அரிசியைப் போட்டு வாசனை வரும்வரை (3 நிமிடங்கள்) இளம் சூட்டில் வறுக்கவும்.பின்னர் நறுக்கிய இஞ்சி, பூண்டையும் போட்டு வதக்கவும்.

கொதிக்கும் தண்ணீரை விட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். ஒருநிமிடம் கொதித்த பின்னர் ஓவனில் உபயோகிக்கக் கூடிய் பாத்திரத்தில் மாற்றி நன்றாக அலுமினியம் தாளால் (Aluminium foil) மூடி 18-20 நிமிடங்கள் வேகவைக்கவும். அரிசி நன்றாக வெந்து பாத்திரத்தின் அடியில் நீர் இன்றி வற்றிப் பொலபொல என வந்த பின்னர் வெளியில் எடுத்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com