சுவாதி காம்பேயின் நாட்டிய அரங்கேற்றம்
சுவாதி காம்பேயின் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் ஆந்திர நாட்டிய நடன அரங்கேற்றம் ஜூலை 24, 2004 அன்று சின்சினாட்டி லகோடா வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நிகழும். குரு பத்மா செப்ரோலு (நிறுவனர், கலை இயக்குநர் - இந்தியக் கலை மையம், சின்சினாட்டி) அவர்களின் சிஷ்யையான சுவாதி ஓஹையோ மாநிலப் பல்கலைக் கழகத்தில் பல்மருத்துவ மாணவர். சுலோகம், புஷ்பாஞ்சலி, கணேச துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், சப்தம், பதம், தில்லானா, சிவதாண்டவம், மங்களம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி.

அதிக விவரங்களுக்கு:
தொலைபேசி: 513.227.9612
இணைய தளம்: www.culturalcentreofindia.com

-

© TamilOnline.com