தயாரிப்பாளராகிறார் குஷ்பு
குஷ்பு தயாரிப்பில் 'கிரி' என்கிற புதிய தமிழ்ப்படத்தை அல்லி சினிமேக்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. அர்ஜூன், ரீமா சென் பிரதான பாத்திரங்கள். தவிர, பிரகாஷ்ராஜ், தேவயானி, வடிவேல் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

படத்துக்காக அர்ஜூன், ஆனந்த்ராஜ், பெப்சி விஜயன் குழுவுடன் மோதும் சண்டைக் காட்சிகளும், துரத்தும் காட்சிகளும் கேரளாவில் படமாக்கப்படும் என்று தெரிகிறது.

வசனம் பூபதி பாண்டியன், ஒளிப்பதிவு கே.எஸ். செல்வராஜ், இசை டி. இமான். படத்தின் திரைக்கதை, இயக்கப் பொறுப்புகளை ஏற்கிறார் சுந்தர் சி.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com