கமலஹாசன் 'வசூல்ராஜா' ஆகிறார்
கமல்ஹாசன் இப்போது மிகவும் பிசியாக இருப்பது 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்திற்காகத்தான். 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' ' என்கிற இந்திப் படத்தின் தமிழ் வடிவமே வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். இந்தியில் இப்படம் வெற்றி பெற்றதையடுத்துத் தமிழில் கமலஹாசன் நடிக்கப் பிரபல தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத்தின் பேரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். சரண் இயக்குகிறார்.

இந்தியில் பெற்ற வெற்றியைத் தமிழிலும் பெறும் என்கிற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்து வருவதாகக் கூறுகிறார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் தந்தையாக நடிக்க கே. பாலசந்தரை அணுகினார். ஆனால் அவர் நடிப்பதற்கு இயலாத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் தமிழ், ஹிந்தி இரண்டு மொழியிலும் ஒரு படம் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

'வசூல்ராஜா' கமல்ஹாசனை வசூல் மன்னனாக்குமா?

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com