குடமிளகாய் சாதம்
தேவையான பொருட்கள்

பச்சைக் குடமிளகாய் - 1
சிவப்புக் குடமிளகாய் - 1
ஆரஞ்சு அல்லது மஞ்சள் குடமிளகாய் - 1
பச்சைமிளகாய் நறுக்கியது - 1 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
மசாலா பவுடர் - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

எல்லாக் குடமிளகாயையும் சிறிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு வறுபட்டபின் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி, பின்னர் குடமிளகாய் போடவும். பாதி வதங்கிய பின்னர் நெய் சாதம் உப்புச் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். மேலாகக் கொத்துமல்லி இலைகளைத் தூவவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com