திருத்தல பயணம் இராமேஸ்வரம்
இந்தியாவின் தென்பகுதியில் தமிழகத் தின் தென்கிழக்கே உள்ள தீவில் அமைந்துள்ள தலம் இராம§சுவரம் ஆகும். இத்தலமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு வாய்ந்தது. சைவ, சமய குரவர்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற தலமாகும்.

ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகத்தியர் சொன்னபடி சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபடுவதற்காக இராமர் ஆஞ்நேயரிடம் கைலாச பர்வதம் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி சொல்ல, ஆஞ்சநேயர் சென்று திரும்பி வருவதற்குள் நல்ல நேரம் நெருங்கிவிட்டதால் சீதாபிராட்டி விளையாட் டாக மண்ணை கையில் பிடித்து சிவலிங்கம் செய்து அதை பிரதிஷ்டை செய்த பின், வந்து சேர்ந்த ஆஞ்சநேயர் கோபமடைந்து இராமரிடம் கேட்க, நீ இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வை என்று சொல்ல ஆஞ்சநேயர் தனது வாலினால் எவ்வளவு முயன்றும் முடியாமல் வால் அறுந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

பின் இராமபிரானால் எழுப்பப்பட்டு முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை செய்து பின்னர் ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும் பூஜை நடைபெறும் என்றார். அன்று முதல் இராமர் பிரதிஷ்டை செய்து உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் என்பதால் இராமேசுவரம் என்ற பெயர் பெற்றது. ஈசன் இராமநாத சுவாமி, தாயார் பர்வதவர்த்தினி.
இத்திருக்கோவிலை கி.பி. 1173 ஆம் ஆண்டு பராக்கிரம பரகு என்ற மன்னனால் கட்டியதாக கல்வெட்டில் உள்ளது. இக் கோவில் கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. கிழக்கு, மேற்கு கோபுரங்கள் அடி முதல் நுனிவரை கருங்கற் களால் ஆனது. கோவிலில் உள்ள நந்தி செங்கல், சுண்ணாம்பு அறையால் அமைக்கப் பட்டது. இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி, உயரம் 17 அடி. பிரகாரங்கள் அனைத்தும் மிக அழகாக அமைந்துள்ளது. மூன்றாம் பிரகாரம் உலகிலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது. வெளிநாட்ட வரையும் கவரும் வகையில் இக்கோயில் பண்டைய கால காலச்சாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது.

வடநாட்டில் உள்ளவர்கள் காசியில் விசுவநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் மற்றும் பூஜை செய்து, கங்கை ஜலத்துடன் இராமேசுவரம் வந்து இராமநாத சுவாமிக்கும் அபிஷேகம் செய்து காசி, இராமேசுவர யாத்திரையை பூர்த்தி செய்கின்றனர். அதே போல் தென்நாட்டில் உள்ளவர்கள் முதலில் இந்த புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட்டு மணல் எடுத்து பூஜை செய்து அதை பிரயாகை திரிவேணி சங்கமத்தில் போட்டு விட்டு காசி விசுவநாதரை தரிசனம் செய்து, அங்கிருந்து கங்கை ஜலம் கொண்ட இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து காசி இராமேசுவரம் யாத்திரையை பூர்த்தி செய்கின்றனர். இந்திய மக்களை இதன் மூலம் ஒன்றாக இணைத்து தேசிய ஒருமைப் பாட்டுக்கு எடுத்துக் காட்டாக விளங்கச் செய்கிறது இத்தலம்.

இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சர்ப்ப சாந்தி, நாகப்ரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்டால் மக்கள்செல்வம் ஏற்படும் என்ற நம்பிக்கை இந்து மக்களி டையே உண்டு. திருக்கோயிலின் மேற்குப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது லட்சுமண தீர்த்தம். லட்சுமணர் தனக்கு ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்ள இத்தீர்த்தத்தை உண்டாக்கினார். நகரின் காவல் நிலையத்துக்கு அருகில் உள்ளது ராமதீர்த்தம். இவ்விரண்டு தீர்த்தங்களிலும் நீராடிய பின் தனுஷ்கோடி சென்று நீராட வேண்டும். தனுஷ்கோடி புயலில் அழிந்து விட்டதால் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ள காஞ்சி மடத்திற்கு முன்பு உள்ள கடல் பகுதியான அக்னிதீர்த்தத்திலேயே சங்கல்பம் செய்து நீராடுகின்றனர். இது மிகவும் புனிதமானது.

இலங்காபுரியிலிருந்து சீதையை மீட்டு வந்த இராமர் சீதையின் சக்தியை சோதிக்க வேண்டி, அக்னி பிரவேசம் செய்யும்படி சொல்லி அக்னி பகவானை வரவழைக்க, சீதை அக்னியில் குதித்தார். அக்னி தீண்டுவதற்கு பதிலாக குளிர்ந்த ஜலத்தை வர்ஷித்தார். மசூவ அக்னிதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இதில் நீராடிய பின்னர் கோவிலுக்குள் வந்து 22 தீர்த்தங்களிலும் நீராட தேவஸ்தானத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். நம்முடன் கோவிலைச் சேர்ந்த நபர் ஒருவர் வாளி, கயிறுடன் வந்து கோயிலுக்குள் அமைந்துள்ள எல்லா தீர்த்தங்களிலும் தண்ணீர் இறைத்து நம் மேல் விடுவார். ஒவ்வொரு தீர்த்தத்திலும் நீராடுவதால் ஒவ்வொரு பலன் உண்டு.

கடைசியாக நீராடுவது கோடி தீர்த்தம். இத்தீர்த்தம் இராமர் லிங்க பிரதிஷ்டை செய்த பின் அபிஷேகத்துக்கு நீர் தேவைப்பட்டதால் இராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் நீர் பூமியை பிளந்து கொண்டு வந்தது. இந்நீரால் இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் தீர்த்தத்தை எடுத்துக் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள். அதன் மூலம் நீராடலாம். நீராடிய பின் உடைமாற்றிக் கொள்ள தனி இடம் உண்டு. உடை மாற்றிய பின் கோவிலுக்கு சென்று இறைவன், இறைவியை தரிசித்த பின்னர் நமது பாவங்கள் நீங்கி புனிதமடைந்த மனநிம்மதி ஏற்படுவது திண்ணம்.

இக்கோயிலுக்கு வெளியே உச்சிமாகாளி அம்மன், கோட்டை முனீஸ்வரன், பத்ரகாளி அம்மன், நம்புநாயகி அம்மன், கோதண்ட ராமர் கோவில், கந்தமாதன பர்வதம் என்னும் குன்றில் ஸ்ரீராமர் பாதங்கள் என்ற இடத்தில் ஸ்ரீராமர் படைவீடாக இருந்தது என கருதப்படுறது.

இக்குன்றின் உச்சியில் இருந்து பார்த்தால் தீவு முழுவதையும் பாம்பன் வரையில் உள்ள ரயில்வே பாலம், லைட் ஹவுஸ், மற்றும் நகரின் அழகிய தோற்றத்தையும் காணலாம்.

பாரத ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த ஊர் இராமேசுவரம் என்பதில் பெருமை கொள்கிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ திஷிதர் இக்கோவில் இறைவன் இராமநாத சுவாமியின் மேல் 'ராமநாதம் பஜேஹம்' எனும் பந்துவராளி ராக கீர்த்தனையை அருளிச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com