சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் '4 ஸ்டூடண்ட்ஸ்'
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்துவிட்டார்கள் நான்கு கல்லூரி மாணவர்கள். இனிக் கல்லூரி மாணவர்களுக்குக் கொண்டாட்டம்தான்!

கேரளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற '·போர் தி பிப்புள்' என்கிற மலையாளப் படம்தான் தமிழில் '4 ஸ்டூடண்ட்ஸ்' என்கிற பெயரில் மறு அவதாரம் எடுக்கிறது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜெயராஜ், தமிழிலும் இயக்கவிருக்கிறார்.

நான்கு மாணவர்களுக்குத் தலைவராக நடிக்கிறார் 'பாய்ஸ்' புகழ் பரத். படத்தின் நாயகனும் அவர்தான். நாயகியாக 'ஆட்டோ கிரா·ப்' புகழ் கோபிகா.

இன்றைய சமூக அவலங்களைக் கண்டு கவலை கொள்ளும் நான்கு இளைஞர்கள், அவற்றை வீழ்த்தப் புறப்படுவதுதான் கதை. மலையாள தேசத்தையே ஒரு கலக்கு கலக்கிய 'லஜ்ஜாவதியே' என்கிற பாடல் தமிழிலும் அதே வார்த்தையுடன் தொடங்குகிறது என்பது முக்கியமான செய்தி.

பழனிபாரதி, நா. முத்துக்குமார் படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர். ஜாஸிகி·ப்ட், பிரவிண் மணி இசை. இன்னொரு முக்கியமான செய்தி, இப்படத்தில் 'கம்பீரம்' படத்தில் நடித்த பிரணதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com