உலகத் திரைப்பட விழாவில் 'ஆட்டோகிராஃப்'
மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற சேரனின் 'ஆட்டோகிராஃப்' உலகத் திரைப்படவிழாவில் கலந்துக் கொள்ளப்போகிறது என்பது சமீபத்திய தகவல்.

கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளில் சேரனின் பெயர் அதிகம் அடிபடுகிறது. பத்திரிக்கைகளில் வரும் அவதூறுச் செய்திகளினால் ரொம்பவும் நொந்திருந்தார் சேரன். இவரது மன வருத்தத்திற்கு ஒத்தடம் தருவது போல் வந்துள்ளது இந்தச் செய்தி.

கனடா நாட்டின் மாண்ட்ரியால் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 26 முதல் செப்டம்பர் 6ம் தேதி வரை திரைப்படவிழா நடைபெறுகிறது. இதில் உலக நாடுகள் பலவற்றின் சிறந்த படங்கள் திரையிடப்படும். அந்த விழாவில் ஆட்டோகிரா·ப் பங்குபெறத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் 'ஆட்டோகிராஃப்'தான்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com