கூப்பர்டினோவில் தீபாவளித் திருவிழா
கூப்பர்டினோ வர்த்தகச் சங்கத்தின் ஆசிய அமெரிக்க வர்த்தகக் குழு (The Asian American Business Council (AABC) of the Cupertino Chamber of Commerce) இந்த ஆண்டுக்கான தீபாவளிக் கொண்டாட்டங் களை இவ்வாறு கொண்டாடும்:

நாள்: அக்டோபர் 3, 2004, ஞாயிறு காலை 10.00 முதல் 11.30: சமுதாயச் சந்தை. அனுமதி இலவசம். இதில் இந்திய உணவு, இசை, உடை மற்றும் கலை நிகழ்ச்சிகள், ஜோசியம், கோலங்கள் ஆகியவை இடம்பெறும்.

மாலை 5.00 முதல் 8.00: விருந்து. இதற்குக் கட்டணம் உண்டு. இது இந்தியத் திருமணச் சடங்குகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

இடம்: Quinlan Community Center, 10185 N. Stelling Road, Cupertino.

மாலை விருந்துக்குக் கட்டண விவரம் (முன்பதிவு அவசியம்):

வர்த்தக சங்க உறுப்பினர்கள்: $ 35 மற்றவர்கள்: $ 40

முன்பதிவு செய்ய: தொலைபேசி: Sherri Caraccilo at 408.252.7054

மின்னஞ்சல்: sherri@cupertino-chamber.org

Cupertino Chamber of Commerce

© TamilOnline.com