ரேவதி தயாரிக்கும் ஹிந்திப்படம்
சின்னத் திரைக்காகச் சில தொடர்களை தயாரித்துக் கொண்டிருந்த நடிகை ரேவதி சமீபத்தில் '·பிர் மிலேங்கே' என்ற ஹிந்திப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்தை ஆங்கிலத்திலும் உருவாக்கியுள்ளார். இப்படத்திற்காகப் பலரிடமிருந்து பாராட்டுக்கள் ரேவதிக்கு வந்து குவிந்துள்ளன என்கிறது கோடம்பாக்கத்துச் செய்தி ஒன்று. எய்ட்ஸ் நோயாளிகளிடம் மற்றவர்களுக்கு இருக்கும் வேண்டாத பயம், அதன் காரணமாக எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் ஒதுக்கப்படும் அவலம், இவர்களை எப்படி அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பவற்றை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com