விக்ரம் நடிப்பில் அன்னியன்
ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'அன்னியன்' படம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ரூ. 29 கோடிக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளதுதான் சமீபத்திய தமிழ்த்திரையுலகில் அதிகம் பேசப்படும் விஷயம்.

இதுவரை இந்தியாவில் இத்தகைய பெருந்தொகைக்கு எந்த ஒரு திரைப்படமும் காப்பீடு செய்யப்படவில்லை என்பது முக்கியமான தகவல். படத்தை சங்கர் இயக்குகிறார். இதற்கிடையில் அமீர்கான் நடிப்பில் உருவாகும் 'தி ரைசிங்' படம் மிகப்பெரும் தொகைக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com