கலைஞரின் 'கண்ணம்மா'
திமுக தலைவர் கருணாநிதி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்குக் கதை, வசனம் எழுதுகிறார். கடைசியாக அவரது கதை, வசனத்தில் வெளியான படம் 'புதிய பராசக்தி' (1996). இப்படத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி எழுதிய பாடல் ஒன்றும் இடம் பெற்றது.

இப்படத்தை பாபா சினிபிலிம்ஸ் தயாரிக்கிறது. தொடக்கவிழா செம்படம்பர் மாதம் ஏவிஎம் அரங்கில் நடைபெற்றது.

'மெட்டி ஒலி' வெங்கட், 'அண்ணாமலை' தொடரில் நடிக்கும் பிரேம்குமார் கதாநாயகர்களாக நடிக்க 'சேது' படநாயகி அபிதா படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது பிரச்சனையில் இருப்பதாகத் தெரிகிறது. படம் தீபாவளிக்கு வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com