ரொட்டி (பிரட்) சிற்றுண்டிகள்
ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்

ரொட்டி - 6 துண்டுகள்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு

செய்முறை

ரொட்டித் துண்டுகளை மிக்சியில் பொடி யாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாய் நிறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் தாளித்து நறுக்கி வைத்துள்ளவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். வேண்டுமானால் சிறிது மஞ்சள்தூளும் சேர்த்துக் கொள்ளவும்.

ரொட்டித் தூளையும், உப்பையும் போட்டு சேர்த்து வதக்கி எடுத்து கறிவேப்பிலை, கொத்துமல்லியை நறுக்கிப்போடவும். இது ஒரு சுவையான அவசரச் சிற்றுண்டியுமாகும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com