அட்லாண்டாவில் குழந்தைகள் தினம்
அட்லாண்டா மாநகரில் முதன்முறையாக குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய சேவைக் கரங்கள் சங்கம் (National Association of Serving Hands - NASH) என்ற இளைஞர்கள் தொண்டு நிறுவனமும், சரிகம என்ற இன்னிசைக் குழுவும் இணைந்து வழங்கும் முதலாவது குழந்தைகள் தினவிழா இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் அன்று துவக்கவிழாவும் ஆகும்.

இதையொட்டி ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள சிறுவர் சிறுமியருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி, இசை நாற்காலி, ஓவியப்போட்டி போன்ற பலவகைப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இனி NASH பற்றி சில வார்த்தைகள். இந்தத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியவர் ஐஸ்வர்யா நரேந்திரன். சிறுவர்களையும் இளைஞர்களையும் நேரடியாகச் சமூகசேவையில் ஈடுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

'சரிகம' எல்லாவிதமான நிகழ்ச்சிகளுக்கும், பலமொழிகளில் பாடல்கள் பாடி மகிழ்விக்கும் ஓர் இசைக்குழு. இக்குழுவின் உறுப்பினர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்னிசை வழங்கியிருக்கிறார்கள்.

அதிக விபரங்களுக்கு: www.sarigame.com

© TamilOnline.com