திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு
நான்கு ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு 2000, 2001, 2002-ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்துத் தமிழ்த் திரையுலகை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த தொழிற்கலைஞர்கள் என மொத்தம் 24 பிரிவுகளுக்கான விருதுகள் அடங்கும்.

முரளி, தேவயானி (2000), சூர்யா, சிநேகா (2001) மற்றும் மாதவன், மீனா (2002) ஆகியோர் சிறந்த நடிகர், நடிகை விருதுகளைப் பெறுகின்றனர். சிறந்த இயக்குனராக விக்ரமன், சுசி. கணேசன், மணிரத்னம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com