பாலா தயாரிக்கும் மாயாவி
இயக்குநர் பாலாவின் புதிய பட நிறுவனத்திற்கான பெயர்சூட்டுவிழா மற்றும் இவர் தயாரிக்கும் புதிய படத்தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பிலிம் சேம்பரில் அண்மையில் நடைபெற்றது.

பாலாவின் 'மாயாவி'யில் சூர்யாவும் ஜோதிகாவும் நடிக்கிறார்கள். பாலாவின் உதவியாளர் மற்றும் வசனகர்த்தாவான சிங்கம்புலி இயக்குகிறார். இசை தேவி பிரசாத்.

பேரழகனைப் போல் இதிலும் சூர்யாவுக்கு வித்தியாசமான தோற்றமாம். 'பிதாமகனில்' வரும் அந்தப் பித்தலாட்டக்காரன் கொஞ்சம் மாயாஜாலம் செய்யும் வித்தைக்காரன் என்ற ரண்டும் சேர்ந்த கலவைதான் 'மாயாவி' என்கின்றனர் படக்குழுவினர்.

2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெள்ளித் திரையில் தோன்றலாம் 'மாயாவி'.

கேடிஸ்ரீ

© TamilOnline.com