கர்நாடக சங்கீத அரங்கேற்றம்: ஷாம்லி அல்லம்
மே 19, 2007 அன்று லலிதகான வித்யாலயாவின் மாணவி ஷாம்லி அல்லத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சான்டா கிளாரா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஹம்சத்வனி வர்ணத்துடன் ஷாம்லி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். தஞ்சாவூர் சங்கர ஐயரின் 'கணபதியே' கல்பனா ஸ்வரங்களுடன் இருந்தது. முத்துஸ்வாமி தீட்சதரின் வசந்தா ராகத்தில் அமைந்த 'மரகதலிங்கம்' மிக விறுவிறுப்பான கல்பனா ஸ்வரத்துடன் அமைந்திருந்தது. முக்கியப் பாடலான சங்கராபரண 'பாகுமீரா' ஷாம்லியின் திறமையை வெளிப்படுத்தியது. இடையிடையே பாடிய ஸ்ரீரஞ்சனி ராக 'ப்ரோசேவாரெவருரே'வும், காபி நாநாயணி ராகப் பாட்டுக்களும் சிறப்பாக இருந்தன.

ஷாம்லி பாடிய பாரதியார் பாடல், அன்னமாசார்யா கிருதி மிக அருமை. தில்லானா, திருப்புகழ் மங்களத்துடன் ஷாம்லி கச்சேரியை இனிமையாக முடித்தார்.

பாலாஜி மகாதேவனின் மிருதங்கமும், ஆனந்த் கல்யாணராமனின் வயலின் வாசிப்பும் கச்சேரிக்கு பக்கபலமாக இருந்தன. கச்சேரி சிறப்பாக அமைந்ததற்கு குரு லதா ஸ்ரீராமின் உழைப்பும் பயிற்சியும் மூலகாரணம்.

சங்கீதப்ரியை

© TamilOnline.com