'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா வருகை
2007 மே 31ஆம் தேதி முதல், ஜூலை மாத இறுதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தருகிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சியாடல் 05.31 - 06.03
சான் ஃபிரான்சிஸ்கோ-
வளைகுடா பகுதி 06.05 - 06.15
லாஸ் ஏஞ்சலஸ் 06.17 - 06.21
நியூ மெக்சிகோ 06.23 - 06.27
டாலஸ் 06.29 - 06.30
அயோவா 07.02 - 07.03
சிகாகோ 07.05 - 07.06
வாஷிங்டன் டி.சி. 07.08 - 07.09
நியூயார்க் 07.11 - 07.13
பாஸ்டன் 07.15 - 07.18
டொரன்டோ , கனடா 07.20 - 07.23

இலவச பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இவற்றில் ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் கையால் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com