புதிய ஜனாதிபதி யார்?
ஜூலை 24ஆம் தேதியோடு ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிகிறது. 'அடுத்து யார்?' என்ற கேள்வி சூடுபிடித் துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கட்சிகளுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தையே ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்துகிறது. ஆனால் இடதுசாரிகளுக்கு பா.ஜ.க. பிரமுகரை ஆதரிக்க விருப்பமில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர்கள் விரும்புகிறார்கள். மூத்த தலைவர் ஜோதி பாசுவும் அதற்கு ஆதரவு தெரிவித்து விட்டார். அமைச்சரவையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பிரணாப் முகர்ஜியை விடுவிக்க சோனி யாவும் மன்மோகன் சிங்கும் சம்மதிப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அர்ஜுன் சிங், என்.டி. திவாரி, சிவராஜ் பாட்டீல், சுஷில் குமார் ஷிண்டே, கரன் சிங் எனப் பலருக்கும் இந்த நாற்காலியில் ஆர்வம் இருப்ப தாகத் தெரிகிறது. அதே சமயம் அப்துல் கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற குரல் மக்களிடையே இருந்து பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கலாமின் விஞ்ஞான சேவையைப் பாராட்டி, அவருக்கு இரண்டாம் சார்லஸ் அரசர் விருதை வழங்க ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன் முடிவு செய்துள்ளதும் கவனிக்கத் தக்கது.

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com