கப்பற்படை அதிகாரியாக சூரியா!
வேகமாக வளர்ந்து வரும் 'வாரணம் ஆயிரம்' படத்தில் முதன்முதலாக நான்கு வேடங்களில் நடிக்கிறார் சூர்யா. 'காக்க காக்க' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த சூர்யா, இப்படத்தில் கப்பற்படை அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகிகளாக 'பாய்ஸ்' பட நாயகிகள் ஜெனலியா மற்றும் திவ்யா ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்கம் கெளதம் மேனன்.

தத்ரூபமாக நடிப்பதற்காக, தன் நண்பர் ஒருவர் மூலம் கப்பற்படை பற்றிய விவரங்களைச் சேகரித்து வருகிறார் சூர்யா.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com