சரத்குமார் நடிக்கும் 'நம்நாடு'
பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த வெற்றிப் படம் 'நம்நாடு'. இப்போது இதே பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறது கனகரத்னா மூவிஸ் நிறுவனம். மலையாளத்தில் வெளிவந்த வெற்றிப்படமான 'லயன்' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்படும் இப்படம், தந்தை மகனுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை அற்புதமாகச் சொல்லும் படமாம்.

நாயகனாக சரத்குமார், நாயகியாகத் தமன்னா நடிக்கிறார்கள். 'கம்பீரம்', 'சபரி' ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் படத்தின் கதை, திரைக்கதையை கவனிக்கிறார். நடிகரும் இயக்குநருமான ரமேஷ்கண்ணா வசனம் எழுதுகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை.

மீண்டும் புதிதாக வெளியான 'நான் அவனில்லை' படம் வியாபார ரீதியாக வெற்றி அடைந்ததைத் தாடர்ந்து இயக்குநர் செல்வா, பாலசந்தரின் 'நூற்றுக்கு நூறு' படத்தையும் விரைவில் ரீமேக் செய்ய உள்ளார்

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com