பசுபதி
அள்ளிப் பருக அறிவிலையே!
'கொள்'ளென்(று) இயற்கையன்னை கோடிஇன்பம் கொட்டினும்
அள்ளிப் பருக அறிவிலையே! - நள்ளிரவில்
விண்மீனைக் காட்ட விரலொருவன் நீட்டினுமென்
கண்நோக்கும் கைமோதி ரம்.

பசுபதி, கனடா

© TamilOnline.com