FeTNA தமிழ் விழா: அறிந்து கொள்ள வேண்டியவை
தாய்நாட்டை விட்டு வந்திருக்கும் பல்லாயிரம் வட அமெரிக்கத் தமிழர் களை ஒன்றுதிரட்டும் வண்ணம் ஆண்டு தோறும் ஒரு மாபெரும் விழா நடக்கிறது. அதுவே வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America) ஆண்டு விழா. இதன் இருபதாவது ஆண்டு விழா வட கரோலினா மாநிலத்தின் ராலே மாநகரில், 2007 ஜூலை 7-9 ஆகிய தினங்களில் நடக்கவுள்ளது. உலகெங்கிலுமிருந்து பல தமிழறிஞர்களும், கலைஞர்களும், உள்நாட்டுத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியாளர்களும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

விழா ஏன்?

உலகிலுள்ள சுமார் ஆறாயிரம் மொழிகளில் மிகத் தொன்மையானவற்றில் ஒன்றாகக் கருதப்படுவது தமிழ். ஐ.நா. சபையின் ஆய்வின்படி, பெரும்பாலான மொழிகள் வேகமாக அழிவடைந்து வருகின்றன. ஆகவே ஐ.நா. ஒவ்வொரு தாய்மொழிக் குழுவையும், தங்கள் தாய்மொழியைப் பேண வேண்டி வலியுறுத்துகிறது. அல்ஷைமர் நோய் (Alzheimer's disease) மூளையைத் திறனிழக்கச் செய்யும் ஒரு நோய். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக் கூடியவர் களுக்கு அல்ஷைமர் நோய் வருவதில்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. சீன, ஃபிரெஞ்சு, ஜப்பானிய, ஹிஸ்பானிய மக்கள் தம் தாய்மொழியைப் பேசுவதிலும் கற்றுக் கொள்வதிலும் பெருமை கொள்பவர் களாக இருக்கிறார்கள். அதற்குப் பெற்றோர் கள் உழைக்க வேண்டும். பலரோடு கருத்தாடல்களை மேம்படுத்திக் கொள்வதும், கலைகளைக் கண்ணுறுவதும், பிள்ளை களுக்குக் காட்டுவதும் கற்றலை மேம்படுத்தும். இவற்றுக்கு ஒரு வாய்ப்பாக அமைவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா.

விழாவில் நீங்கள் எப்படிப் பங்குபெறலாம்?

விருந்தினராகக் கலந்துகொள்ளலாம். நல்ல உணவு, உறையுள் வசதியுடன், அனைத்துக் கலைகளையும் கண்டு களிக்கலாம். நீங்கள் தொழில் முனைவோராக இருந்தால் உங்கள் நிறுவனத்தைப் பற்றி விழாவில் விளம்பரம் செய்யலாம். ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை வழங்குபவராகவோ, பொதுவான கொடை யாளராகவோ நீங்கள் இருக்கலாம். உங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தைக் குறைந்த கட்டணத்தில் அதிகமான தமிழர்களைச் சென்றடையுமாறு 'விழா மல'ரில் வெளியிடலாம்.

நீங்கள் எழுதும் திறமை கொண்டவராக இருந்தால், உங்கள் படைப்புகளை விழா மலருக்கு அனுப்பலாம். ஜூன் 10க்குள் படைப்புக்களை அனுப்ப வேண்டும்.

கலைத்திறன் மிக்கவர்கள் தங்கள் பகுதி தமிழ்ச்சங்கத்தோடு அல்லது எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை மேடையேற்ற இந்த விழா ஒரு நல்ல இடம்.

வள்ளல் அல்லது கொடைவள்ளல் போன்ற தகுதியுடன் விழாவில் முக்கிய உறுப்பினராகக் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் குடும்பத்துக்கான முன்னிருக்கை நுழைவுச் சீட்டுகள், கலைஞர்களுடன் விருந்து போன்ற முக்கியப் பயன்கள் உண்டு.

யாரைத் தொடர்பு கொள்வது?

இதோ இவர்களில் ஒருவரை:

Dr. Thani Kumar Cheran 919.467.4350 cherans@earthlink.net
V. Vedaiyan 919.816.0639 vedaiyan@yahoo.com
Thillai K.Kumaran 408.857.0181 president@fetna.org
S. Subramaniam 954.675.6883 treasurer@fetna.org

விழாக்குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை.

© TamilOnline.com