ஜூன் 2007: குறுக்கெழுத்துப் புதிர்
பதினாறிலிருந்து அறுபது வரை

சென்ற மாதப் புதிரில் "வள்ளி"யூர் என்று குறிப்பிட்டது மாயூரத்திற்கருகிலுள்ள தில்லையாடி என்ற ஊரை. தென்னாப்பிரிக்காவிலே 1898 இல் பிறந்து, பதினாறு வயதிலேயே தென்னாப்பிரிக்காவி லேயே இறந்த வள்ளியம்மை உண்மையிலேயே தில்லையாடி வந்திருந்தாளா என்று தெரியாது. காந்தியின் போராட்டத்திலே கலந்து கொண்டவள், இந்தியருக்குக் கொடி கூட கிடையாது என்ற ஏளனத்தால், ஒரு புடவையைக் கிழித்து இதுதான் எங்கள் கொடி என்று கூறினாளாம். காந்தி தமிழ்நாட்டுக்கு வந்த போது அந்த கிராமத்திற்குச் சென்று வந்தாராம். அதற்கான நினைவுக்கல் அவ்வூரில் இருக்கிறது. இந்த புடவைக்கொடி சம்பவத்தால்தான் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தார் சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையிலுள்ள அவர்கள் விற்பனை நிலையத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்ற பெயரை வைத்தார்களென்றால் பாராட்ட வேண்டும். தில்லையாடி கிராமம் மாயூரம்-தரங்கம்பாடி சாலையில் உள்ளது. தரங்கம்பாடிக் கடலில் பிடித்த மீன்வாசனையுடன் ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை ஒரு பாசஞ்சர் ரயில் வண்டி மாயூரம் (சந்திப்பு) செல்லும். (முப்பது, நாற்பது கிலோ மீட்டர் தூரம் தானிருக்கும்) டென்மார்க் நாட்டினர் 1620இல் இந்தியா வந்து தரங்கம்பாடியில் கட்டிய கோட்டை இன்றும் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் கைவசமான அக்கோட்டை இன்று தொல்பொருள் துறையினரிடம் இருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் அந்த தடத்தில் செல்லும் பலருக்கு 1620 கதையும் தெரிவதில்லை, 16 வயதில் உயிர் நீத்த வள்ளியும் தெரிவதில்லை, அறுபதாம் கல்யாணம் செய்ய திருக்கடையூர்தான் தெரிகிறது.

vanchinathan@gmail.com

குறுக்காக

5. கொள்ளி வைப்பதற்கு உருக்குலை (2)
6. அகப்பை உள்ளிருப்பதில் படலம் படர்ந்தால் சுத்தமானதல்ல (5)
7. இரவு நிலவாக சுரங்களின்றி வரும், அப்படித்தானே? (4)
8. சுழியில்லாமல் பேச்சுக்கு முன்னே மயக்கத்தைத் தருவது ஒரு நகரம் (3)
9. சற்று தேய்ந்த காலணி சுள்ளி (3)
11. பள்ளத்தின் நடுவே மின்னத் தொடங்கும் பூதத்துக்குள் பூதம் (3)
13. மதிப்பிலிருந்து குறைந்த மூன்றாம் கடுகம் (4)
16. காலிழந்த சிப்பாய் ஆரிய மயக்கத்தில் இயற்றிய செய்யுள் வகை (6)
17. ஆயுதம் வீங்கு (2)

நெடுக்காக

1. கதை முடிய வேகமான காற்று சூழ மற்றொரு பூதத்தில் மறைக்கப்பட்ட பொக்கிஷம் (4)
2. பெரிய ஊர்க்காரன் சற்றே அசைய, படி (5)
3. திரை விழும் பருவம் (3)
4. தாண்டி ஓட ஆரம்பிக்கவிடாமல் அழுத்திடும் அநியாய வட்டி (4)
10. பாதி புதைய மாற்றியமைத்த வழி யாரும் செல்லாதது (3, 2)
12. தேவைக்குப் பின் தங்கிய காலணி சற்றே தேய... (4)
14. நம்பித் தன்னிடம் வந்திருப்பவனைக் காக்கும் கடவுள் இல்லை! (4)
15. நேர்நிலையிலிருந்து பிறழ வேல் முனை அச்சு (3)

புதிருக்கு புதியவரா?

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

மே 2007 புதிர்மன்னர்கள்

© TamilOnline.com