காரட்-தக்காளித் தொக்கு
தேவையான பொருட்கள்

காரட் - 5
தக்காளி - 5
புளி - சிறிதளவு
மிளகாய்ப்பொடி - 2 மேசைக் கரண்டி
பெருங்காயம் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
ந. எண்ணெய் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை

காரட்டை கொப்பரைத் துருவலில் சீவி, தக்காளியை நறுக்கி, இரண்டையும் எண்ணெய் விட்டு வதக்கி மிக்சியில் புளி, உப்புடன் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி போட்டு சர்க்கரையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகத் தொடங்கியதும் சுற்றிலும் கொதி வரும்போது இறக்கிவிடவும். இதுவும் தொட்டுக் கொள்ள சுவையான தொக்கு. அதிக புளிப்பான தக்காளியாக இருந்தால் புளி தேவையில்லை.

இதே போல் பச்சைத் தக்காளி, கேரட் சேர்த்தும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com