தொக்கு வகைகள் II
நெல்லிக்காய்த் தொக்கு

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 10 அல்லது 15
மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
புளி - சிறு கொட்டைப் பாக்கு அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
சர்க்கரை அல்லது
வெல்லம் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப
ந. எண்ணெய் - 1/4 கிண்ணம்

செய்முறை

நெல்லிக்காயை குக்கரில் வேகவிடவும். விதைகளை எடுத்த பின்பு, உப்பு புளி சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு மஞ்சள் பொடி, மிளகாய்த்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். சர்க்கரை அல்லது வெல்லம் போட்டுக் கிளறி சுருண்டு வரும் போது இறக்கி விடலாம். இது மிகவும் ருசியான தொக்கு.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com