சின்சினாட்டியில் 'இந்தியப் புராதன நடனங்கள்'
·பெப்ருவரி 12, 2005 அன்று சின்சினாட்டி கலைக் கண்காட்சியில் இருக்கும் கிரேட் ஹால் அரங்கில் (Great Hall of the Cincinnati Art Museum) 'இந்தியப் புராதன நடங்கள்' (Ancient Dances of India) என்ற நிகழ்ச்சியை இந்தியக் கலாசார மையம் வழங்கும்.

இம்மையத்தை நிறுவி அதன் கலை இயக்குநராக பத்மா செப்ரோலு இயங்கி வருகிறார்.

இந்திய நடங்கள் வரிசையில் பல விழிம அடர்தட்டுகள், ஒலிக் குறுந்தட்டுகள் ஆகியவற்றை இவர் வெளியிட்டுள்ளார். தவிரப் பல நாட்டிய வகுப்புகள், செயல்முறை விளக்கங்கள், பயிலரங்குகள் ஆகியவற்றைத் தனித்தும், பல்கலைக் கழகங்களுக்காகவும் நடத்தி வருகிறார்.

மென்பொருள் பொறியாளரான பத்மா, நடனத்தில் இளங்கலை, வணிக நிர்வாகத்தில் முதுகலை (சேவியர் பல்கலை), கல்வியில் முதுகலை (சின்சினாட்டிப் பல்கலை) ஆகியவை பெற்றவர். நடனம் மற்றும் நடனம் பயிற்றலில் தனிக் கலைஞர் விருதை இவருக்கு ஒஹையோ கலை மன்றம் வழங்கியுள்ளது. இவர் ஒஹையோ நடன வாரியத்தின் 2003-2006க்கான உறுப்பினரும் ஆவார்.

© TamilOnline.com