சிரிக்க ஒரு 'லண்டன்'
முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் ஒன்றை இயக்குகிறார் சுந்தர் சி. 'லண்டன்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் பிரிட்ஜ், பக்கிங்காம் அரண்மனை, பிக்காடில்லி சர்க்கஸ், மியூசியம் என்று லண்டன் நகரின் பல பகுதிகளில் நடைபெறுகிறது.

நாயகனாகப் பிரசாந்தும் ஜோடியாக அங்கிதாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோரின் நடிப்பில் உருவாகிறது 'லண்டன்'. தொண்ணூறு சதவீதப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 'லண்டன்' திரைக்கு வரும் நேரம் தொலைவில் இல்லை.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com