மஞ்சுவிரட்டில் முந்துகிறது 'ஐயா'!
இந்த வருடப் பொங்கலுக்கு விஜய்யின் 'திருப்பாச்சி', சரத்தின் 'ஐயா', பிரசாந்தின் 'ஆயுதம்', சத்யராஜின் 'அய்யர் ஐ.பி.எஸ்.', தனுஷின் 'தேவதையைக் கண்டேன்', விக்னேஷின் 'உள்ளக் கடத்தல்', புதுமுகங்களின் நடிப்பில் 'டான்ஸர்', 'ஜதி' ஆகிய எட்டுப் படங்கள் திரையிடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் 'ஐயா'தான் முன்னிலையில் இருக்கிறதாம். இரட்டை வேடங்களில் சரத்குமார் படத்தில் வெளுத்து வாங்குகிறார். ஐந்து ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு லட்சுமி பெரிய சரத்தின் மனைவியாகப் பெரிய திரைக்கு வந்திருக்கிறார். விஜய்க்கு 'திருப்பாச்சி' 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு:கேடிஸ்ரீ

© TamilOnline.com