அக்டோபர் 2023: வாசகர்கடிதம்
செப்டம்பர் மாதத் தென்றலில் வறுமையை வண்ணங்களால் வென்ற ஓவியர் மணிகண்டன் வாழ்க்கை எல்லோருக்குமே ஒரு கண்திறப்பு. வறுமையைக் காரணம் காட்டாமல் சுயமுயற்சியால் வென்றது சிறப்பு.

உ.வே.சா. அவர்களின் 'என் சரித்திரம்' நூலின் ஒரு பகுதியை வெளியிட்டது முழு நூலையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. மேலோர் வாழ்வில் பகுதியில் நரசிம்மசுவாமி அவர்களின் வாழ்க்கையில் குருவின் தேடலை பா.சு. ரமணன் விவரித்த விதம் சிறப்பு.

வித்யாலக்ஷ்மி,
சிமி வேல்லி, கலிஃபோர்னியா

© TamilOnline.com