அதை எழுதியவர் யார்?
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை எழுதவில்லை ஐயா, நீங்கள் எழுதினீர்களோ என்னவோ" என்றான்.

இதனால் சங்கடம் அடைந்த ஆசிரியர், "நான் நிச்சயம் எழுதவில்லை, ஒருவேளை நீங்கள் எழுதினீர்களோ?" என்று அதிகாரியிடமே கேட்டார். எதற்கும் கவனமாக இருக்கலாமே என்றெண்ணிய அதிகாரி துணைவேந்தருக்கு இந்தக் கேள்வியை அனுப்பினார். யாரோ ஓர் அந்தணர் எழுதியிருக்கலாம், பேசாமல் இந்த விஷயத்தை இதற்கு மேல் அலசவேண்டாம் என்று துணைவேந்தர் பதில் அனுப்பிவிட்டார்.

இதன் பொருள் என்னவென்றால், இன்றைக்கு நமது கல்வித்துறை பரிதாபமான நிலையில் இருக்கிறது; மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வு அதிகாரிகள், துணை வேந்தர்கள் எல்லோருமே ஒன்றுபோல அறியாமையில் இருக்கிறார்கள். ராமாயணத்தை எழுதியவரின் பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் நம்மைக் கற்றறிந்தவர்களாகக் கருதிக்கொள்வதில் நியாயமே இல்லை.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com