புதுப்பட்டினத்தில் புதிய நம்பிக்கை
சுனாமிக்குப் பின் நான்கே நாட்களில் இந்தியாவுக்குப் பறந்தார் அமெரிக்க முதலீட்டாளர் ஆண்ட்ரூ ஜே. கிரீகர் (CEO, IMGE Emergency Relief Fund). அவர் அளித்த குடிநீர், மருந்துகள் கொண்ட 1,00,000 பவுண்டு எடை யுள்ள நிவாரணப் பொருட்கள் சில நாட்களிலேயே சென்னையை அடைந்தன என்றால் அதற்கு AmeriCares நிறுவனத்தின் திறமைதான் காரணம். கிரீகரோடு இணைந்து செயல்பட்டார் மார்க் டெம்ப்ளர் (CEO, HOPE Foundation). இந்நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் பாத்திரங்கள், பள்ளிச் சீருடை, பாடப் புத்தகங்கள், அடுப்பு, இரண்டு மாத மளிகைச் சாமான்கள், மீன்பிடி வலை, படகுக்கான எஞ்சின் ஆகியவை சுமார் 5,500 டாலர் மதிப்புக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. நாகப்பட்டினத்தின் அருகிலுள்ள ஒய்யாலிக் குப்பம் மற்றும் புதுப்பட்டினத்தில் இருக்கிறார்கள் இதன் பயனாளிகள்.

மேலும் இந்நிறுவனம் பற்றி அறிய: http://www.imgeemergency.com/

கிரீகரின் சுனாமி குறித்த நாட் குறிப்புப் படிக்க:
http://www.imgeemergency.com/tsunami_journal.html

ரூபா ரங்கநாதன்,
நியூ ஜெர்ஸி.

© TamilOnline.com